MARC காட்சி

Back
அருள்மிகு மணவாளேஸ்வரர் திருக்கோயில்
245 : _ _ |a அருள்மிகு மணவாளேஸ்வரர் திருக்கோயில் -
246 : _ _ |a திருவேள்விக்குடி
520 : _ _ |a திருவேள்விக்குடி கல்யாணசுந்தரேசுவரர் கோயில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருத்தலம். திருஞானசம்பந்தர், சுந்தரர் இவர்களால் பாடல் பெற்ற தேவாரத் தலம். தேவாரத்தலங்கள் 274-இல் இத்தலம் 23-வது தலமாகும். இத்தலத்தின் அருகிலேதான் திருமணஞ்சேரி திருத்தலம் அமைந்துள்ளது. இக்கோயில் இரண்டும் ஒன்றாக இணைத்துப் பாடல் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. முற்காலச் சோழர் கலைப்பாணியில் கட்டப்பட்ட இக்கோயிலில் பராந்தகச் சோழன், செம்பியன்மாதேவி இவர்களது கலைப்பணியும், கல்வெட்டுகளும் காணக்கிடைக்கின்றன. நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து கெளதுகா பந்தன தீர்த்தத்தில் நீராடி மணவாளேஸ்வரர் மற்றும் பரிமளசுகந்த நாயகியை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
653 : _ _ |a திருவேள்விக்குடி, கல்யாணசுந்தரேஸ்வரர், மணவாளேஸ்வரர், குத்தாலம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருமணத்தலம், முற்காலச் சோழர் கோயில், சோழர் கலைப்பாணி
700 : _ _ |a அருண்குமார் பங்கஜ்
710 : _ _ |a அருண்குமார் பங்கஜ்
902 : _ _ |a 04364 235462
905 : _ _ |a கி.பி.9-10ஆம் நூற்றாண்டு/ முற்காலச் சோழர்கள்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. திருஞானசம்பந்தர், சுந்தரர் இவர்களால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.
914 : _ _ |a 11.08609621
915 : _ _ |a 79.5688677
916 : _ _ |a கௌதகேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர், மணவாளேஸ்வரர்
917 : _ _ |a கல்யாணசுந்தரேஸ்வரர்
918 : _ _ |a பரிமளசுகந்தநாயகி, கௌதகேசி, நறுஞ்சாந்து நாயகி.
923 : _ _ |a கெளதுகா பந்தன தீர்த்தம், மங்கள தீர்த்தம்
925 : _ _ |a காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
926 : _ _ |a மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்
927 : _ _ |a செம்பியன் மாதேவி, இராஜராஜ சோழன், பராக்கிரம சோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவன் மணவாளநம்பி, மங்கலநக்கர், திருவேள்விக்குடி உடையார் என்னும் பெயர்களால் குறிக்கப்படுகிறார்.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a இறைவன் கருவறை தேவகோட்டச் சிற்பங்களாக தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், சந்திரசேகரர், பிட்சாடனர் ஆகியோர் உள்ளனர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தில் தேவி வலதுபுறமும், இறைவன் இடதுபுறமும் உள்ளதைக் காணலாம். அர்த்த மண்டபத்தின் வெளிப்புறக் கோட்டத்தில் நடராஜர், அகத்தியர் மற்றும் விநாயகர் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தளப்பகுதியில் சுதைச்சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சண்டிகேசுவரர் வடக்குத் திருச்சுற்றில் காட்சியளிக்கிறார்.
930 : _ _ |a கைலாயத்தில் ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார். உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திரானி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார். சுய உருவம் பெற்ற அம்பிகை ஈசனை நினைத்து 16 திங்கட்கிழமை விரதம் இருந்து மனலால் லிங்கம் செய்து வைத்து பூஜை செய்து வர 17வது திங்கட்கிழமை சிவபெருமான் தோன்றி ஈஸ்வரியை திருமணம் செய்து கொண்டார் என்று தல புராணம் கூறுகிறது. பார்வதி சிவன் கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம் வளர்த்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முதலியன இத்தலத்தில் தான் நடைபெற்றன. பிரம்மா தானே முன் நின்று திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். வேள்வி வளர்த்து யாகம் முதலிய ஏற்பாடுகள் நடைபெற்ற தலமாதலால் திருவேள்விக்குடி என்ற பெயர் ஏற்பட்டது. அரசகுமாரன் ஒருவனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின் பெண்ணின் பெற்றோர்கள் இறந்து விட அவளின் உறவினர்கள் இத்திருமணத்தை நிறுத்தி விட்டனர். அரசகுமாரன் எவ்வளவோ வேண்டியும் உறவினர்கள் சம்மதிக்கவில்லை. அரசகுமாரன் இத்தலம் வந்தான். நின்று போன தன் திருமணம் நடக்க வேண்டும் என்று இத்தல இறைவனை வேண்டினான். இனைவன் ஒரு பூதத்தை அனுப்பி அப்பெண்ணைக் கொண்டு வரச் செய்து அரசகுமாரனுக்கும் அப்பெண்ணிற்கும் திருமணம் செய்து வைத்தார் என்று தல வரலாறு கூறுகிறது.
932 : _ _ |a இங்குள்ள கோவில் மூன்று நிலைகளுடன் கூடிய கிழக்கு நோக்கிய இராஜகோபுரமும், இரண்டு திருச்சுற்றுகளும் உடையதாய் திகழ்கிறது. இறைவன் கருவறைக்கு முன்னே அர்த்த மண்டம், மகாமண்டபம் உள்ளன. இறைவன் கருவறை தேவகோட்டச் சிற்பங்களாக தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், சந்திரசேகரர், பிட்சாடனர் ஆகியோர் உள்ளனர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தில் தேவி வலதுபுறமும், இறைவன் இடதுபுறமும் உள்ளதைக் காணலாம். அர்த்த மண்டபத்தின் வெளிப்புறக் கோட்டத்தில் நடராஜர், அகத்தியர் மற்றும் விநாயகர் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மணவாளேஸ்வரர் கருவறை விமானம் தாங்குதளம் முதல் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், விமானத்தின் தளப்பகுதி தற்காலப் பணியாக சுதை அமைப்பாகவும் காட்சியளிக்கிறது. தளப்பகுதியில் சுதைச்சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடக்குத் திருச்சுற்றில் சண்டிகேசுவரருக்கு தனி திருமுன் தற்காலப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் சுவர் மற்றும் தாங்குதளத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பரிமளசுகந்த நாயகியின் திருமுன் (சந்நிதி) முதல் திருச்சுற்றில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் தீர்த்தமான கெளதுகா பந்தன தீர்த்தம் கோயிலின் முகப்பு வாயிலுக்கு எதிரே அமைந்துள்ளது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a திருமணஞ்சேரி, வழுவூர் கோயில், ஆக்கூர் சிவன் கோயில்
935 : _ _ |a மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலத்தில் இருந்து வடகிழக்கே 3 கி.மீ. தொலைவில் திருவேள்விக்குடி மணவாளேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 11.00 மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 வரை
937 : _ _ |a திருவேள்விக்குடி, குத்தாலம்
938 : _ _ |a மயிலாடுதுறை, நாகப்பட்டினம்
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a மயிலாடுதுறை விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000117
barcode : TVA_TEM_000117
book category : சைவம்
cover images TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_இராஜகோபுரம்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_இராஜகோபுரம்-0001.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_விமானம்-0002.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_கருவறைத்-திருச்சுற்று-0003.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_கருவறைத்-தாங்குதளம்-0004.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_கருவறைத்-தாங்குதளம்-யானை-0005.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_கருவறைத்-தாங்குதளம்-யானை-0006.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_தட்சிணாமூர்த்தி-0007.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_இலிங்கோத்பவர்-0008.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_நான்முகன்-0009.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_அர்த்தநாரீசுவரர்-0010.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_சந்திரசேகரர்-0011.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_பிட்சாடனர்-0012.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_நடராசர்-0013.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_அகத்தியர்-0014.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_கணபதி-0015.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_துர்க்கை-0016.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_விஷ்ணு-0017.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_சிம்மயாளி-0018.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_முனிபத்தினியர்-0019.jpg

TVA_TEM_000117/TVA_TEM_000117_திருவேள்விக்குடி_மணவாளேஸ்வரர்-கோயில்_பிட்சாடனர்-0020.jpg